திங்கள், 5 டிசம்பர், 2011

மயில்

சித்திரை வெயில்
நடனமாடும் மயில்
கூந்தல் உலர்த்தும் அவள்!

தாய்மொழி

ஆங்கிலப் பள்ளியில்
அடிவாங்கும் குழந்தை
அழுகிறது..."அம்மா"

வறுமை

ஆடைகிழிந்த சிறுமி
புதுத்துணி மாற்றுகிறாள்
சன்னலுக்கு

ஹைகூ

இரண்டு வரிகள்தான்
ஆனாலும் அழகிய ஹைகூ
அவள் இதழ்கள்.

சுமை

பாரம் தூக்கும் தொழிலாளி
அங்கலாய்த்துக் கொண்டான்
தன் குழந்தையின் புத்தக பாரம் கண்டு.

மழை

அவசரக் காற்று
முதல் மழை
புளியம்பூக்கள்

உறக்கம்

விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.

நன்றி

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.

அவள்

எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.

மயில்

சரியான பொருத்தம்
அவள் குடியேறிய ஊர்
மயிலாடுதுறை

நிலா

மார்கழிப் பனியில்
நனையும் மஞ்சள் நிலா
கோலமிடும் அவள்!

கோபம்

தாமதமாக வருவது கூட சுகம்தான்
காத்திருந்த கோபத்தில்
காதை திருகுவாள்......!

வறுமை

கூலியற்ற நாட்கள்
விழித்திருக்கிறது
"பசி"....

பயம்

ஆறுபடை முருகன் கோயிலுக்கு
ஏழு பூட்டு......
"யாமிருக்க பயமேன்"

மின்சாரம்

இருளில் கிராமங்கள்!
நகர சுடுகாட்டில்
மின் தகனம்!

நம்பிக்கை

சகுனம் சரியில்லை
திரும்பி நடந்தது!
மனிதனை கண்ட பூனை!

வேதனை

ஆள்கள் மாறிக் கொள்கிறார்கள்
அய்யோ பாவம்
உழவுமாடுகள்

ஆயுள் ரேகை

ஜோதிடன் தடுமாறினான்
உழைப்பாளியின் கைகளில்,
அழிந்துபோனஆயுள்ரேகை

விறகு வெட்டி

மரமெல்லாம்
வெட்டியாகி விட்டது
வெயிலில்
விறகு வெட்டி...?

ஆடை

ஏக்கத்துடன் பார்த்தாள்,
ஏழைப்பெண்
கோவிலில் அம்மனுக்கு
அழகான பட்டுப் புடவை!

வாசம்

தாமரை குளத்தில்
மல்லிகை வாசம்
குளித்துப்போயிருப்பாள்.... என்னவள!..

பாதச்சுவடு

புள்ளிகள்
இல்லாத கோலம்
அவள்
"பாதச்சுவடு" 

படித்ததில் பிடித்தது -எழுதியது  மு.தினேஷ்

வியாழன், 1 டிசம்பர், 2011

வெட்கத்தை கேட்டல் என்ன தருவாய்

நான் எது கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாய்!..
வெட்கத்தை கேட்டல் என்ன தருவாய்!..

படித்ததில் பிடித்தது. எழுதியது கவிஞர் தபு சங்கர்