திங்கள், 5 டிசம்பர், 2011

மயில்

சித்திரை வெயில்
நடனமாடும் மயில்
கூந்தல் உலர்த்தும் அவள்!

தாய்மொழி

ஆங்கிலப் பள்ளியில்
அடிவாங்கும் குழந்தை
அழுகிறது..."அம்மா"

வறுமை

ஆடைகிழிந்த சிறுமி
புதுத்துணி மாற்றுகிறாள்
சன்னலுக்கு

ஹைகூ

இரண்டு வரிகள்தான்
ஆனாலும் அழகிய ஹைகூ
அவள் இதழ்கள்.

சுமை

பாரம் தூக்கும் தொழிலாளி
அங்கலாய்த்துக் கொண்டான்
தன் குழந்தையின் புத்தக பாரம் கண்டு.

மழை

அவசரக் காற்று
முதல் மழை
புளியம்பூக்கள்

உறக்கம்

விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.

நன்றி

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.

அவள்

எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.

மயில்

சரியான பொருத்தம்
அவள் குடியேறிய ஊர்
மயிலாடுதுறை

நிலா

மார்கழிப் பனியில்
நனையும் மஞ்சள் நிலா
கோலமிடும் அவள்!

கோபம்

தாமதமாக வருவது கூட சுகம்தான்
காத்திருந்த கோபத்தில்
காதை திருகுவாள்......!

வறுமை

கூலியற்ற நாட்கள்
விழித்திருக்கிறது
"பசி"....

பயம்

ஆறுபடை முருகன் கோயிலுக்கு
ஏழு பூட்டு......
"யாமிருக்க பயமேன்"

மின்சாரம்

இருளில் கிராமங்கள்!
நகர சுடுகாட்டில்
மின் தகனம்!

நம்பிக்கை

சகுனம் சரியில்லை
திரும்பி நடந்தது!
மனிதனை கண்ட பூனை!

வேதனை

ஆள்கள் மாறிக் கொள்கிறார்கள்
அய்யோ பாவம்
உழவுமாடுகள்

ஆயுள் ரேகை

ஜோதிடன் தடுமாறினான்
உழைப்பாளியின் கைகளில்,
அழிந்துபோனஆயுள்ரேகை

விறகு வெட்டி

மரமெல்லாம்
வெட்டியாகி விட்டது
வெயிலில்
விறகு வெட்டி...?

ஆடை

ஏக்கத்துடன் பார்த்தாள்,
ஏழைப்பெண்
கோவிலில் அம்மனுக்கு
அழகான பட்டுப் புடவை!

வாசம்

தாமரை குளத்தில்
மல்லிகை வாசம்
குளித்துப்போயிருப்பாள்.... என்னவள!..

பாதச்சுவடு

புள்ளிகள்
இல்லாத கோலம்
அவள்
"பாதச்சுவடு" 

படித்ததில் பிடித்தது -எழுதியது  மு.தினேஷ்

வியாழன், 1 டிசம்பர், 2011

வெட்கத்தை கேட்டல் என்ன தருவாய்

நான் எது கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாய்!..
வெட்கத்தை கேட்டல் என்ன தருவாய்!..

படித்ததில் பிடித்தது. எழுதியது கவிஞர் தபு சங்கர்

வெள்ளி, 18 நவம்பர், 2011

கவிதை

காதலில் மட்டும் தான்
வெற்றிக்கும்
தோல்விக்கும்
ஒரே பரிசு... கவிதை..!


படித்ததில் பிடித்தது from orukavithai.com

செவ்வாய், 1 நவம்பர், 2011

ஆசை

மேகமே உனக்கும் ஆசையோ?
என்னவள் மேனியை தழுவ
மழையாய் பொழிகிறாய்

கேட்டதில் பிடித்தது, சொன்னவர் என் நண்பர் சுடலை.

திங்கள், 31 அக்டோபர், 2011

கண்கள்

பெண்ணே உன் கண்களுக்கு இவ்வளவு சக்திய,
என்னையும் கவிஞன் ஆக்கிவிட்டதே!..

சொந்தமா யோசிச்சது பாஸ்

சனி, 29 அக்டோபர், 2011

நட்சத்திரம்

காதலியிடம் காதலன்:
பெண்ணே, 
கண் சிமிட்டாமல் வானத்து  நட்சத்திரங்களை நீ பார்த்துகொண்டிருந்தாள், 
என் நட்சத்திரத்தின் கண் சிமிட்டலை நான் எப்படி ரசிப்பது!..

எழுதியது நான் தான்

வியாழன், 28 ஜூலை, 2011

மௌன விரதம்

பெண்ணே நீ மௌன விரதம் இருக்கும்  போது தயவு செய்து கண்களையும் முடிக்கொள் , 
உன் இதழ்களை விட கண்கள் தான் அதிகம் பேசுகின்றன!...

படித்ததில் பிடித்தது 

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

கண்ணீர் பூக்கள்!.

கண்ணீர் துளிகளும் பூக்களாய் உதிர்கின்றன
உனக்காக அழும் போது !..

இவை என்னுடைய கண்ணீர் துளிகள் 

புதன், 16 பிப்ரவரி, 2011

ராசி!.

நீ பிறந்த மருத்துவ அறைக்கு ராசி கூடிவிட்டதாம்.
அழகு குழந்தைகள் பிறக்க அங்குதான் பிரசவம் பார்க்கவேண்டுமென
அடம் பிடிகிராரகலம் கர்பிணி பெண்கள் ....

என் தோழிக்காக தேடி படித்தது

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

பூ வாசம்

கூந்தலில் பூ வாசம் வீசும்-தெரியும்,
இந்த பூவில் உன் கூந்தல் வாசனை வீசுகிறதே.!!!

என் தோழிக்காக தேடி படித்தது 

கவிதை

உன்னால் கவிதை படைக்கும் நான் கவிஞ்சனெனில்,
உன்னை படைத்த உன் பெற்றோரை என்னவென்பதாம்!..

என் தோழிக்காக தேடி படித்தது 

சம்மதம்

நீ ஒன்றும் செய்ய வேண்டாம் சம்மதம் மட்டும் சொல்,
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்!!!

என் தோழிக்காக தேடி படித்தது 

கவலைகள்

நீ உன் நன்பர்களிடம் பேசும் போது
என்னை மறந்து விடுகிறாய்,
இப்படிக்கு,
--கவலைகள்--.

ஆசை!

இன்று எனக்கு மணிபர்ஸ் வாங்கும் ஆசை வந்துவிட்டது!!
பணம் கிடைத்ததால் அல்ல ,
அவள் புகைப்படம் கிடைத்தால்!!!.

மௌன அஞ்சலி

நீ யாருக்கோ செய்த மௌன அஞ்சலியைப் பார்த்ததும் எனக்கும் செத்துவிட தோன்றியது!..